புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும் | பூதலங் ளவையெட்டும் பொழில்க ளெட்டும் | கலையெட்டும் காப்பெட்டுங் காட்சி யெட்டுங் | கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும் | நகையெட்டு நாளெட்டும் நன்மை யெட்டும் | நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும் | திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ | திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. | (தி. 6 ப. 34 பா. 9) |
என்றும், 'ஐயன்காண் குமரன்காண் ஆதியான்காண்' என்றும் (தி. 6 ப. 24 பா. 8) அப்பர் சுவாமிகள் தெரிவிக்கிறார்கள். சுந்தரமூர்த்திகளும் 'முன்னமே முளைத்தான்' என்று ((தி. 7 ப. 67. பா. 9) குறிப்பிடுகிறார். 'ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம் மூலமாய் எங்கும் முளைத்த லிங்கம்' -சொக்கநாத. 1 என்ற அடியார் வாக்கும் ஈண்டு நினைவு கோடற்குரியது. இறைவன் வானாகவும், மண்ணாகவும், வளியாகவும், ஒளியாகவும் இருந்து விளக்கம் செய்யும் அழகை நம்பியாரூரர் பல இடங்களில் எடுத்துப் பாடுவார். 'ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்' (தி. 7 ப. 1 பா. 7) 'நிலங்கிளர்நீர் நெருப்பொடு காற் றாகாசமாகி' (தி. 7 ப. 34 பா. 9) உருவாக அருவாக உளதாக இலதாக, மருவாக, மலராக, மணியாக, ஒளியாக, கருவாக, உயிராக, கதியாக, விதியாக வரும் ஈறிலா இறைவனை எளிமை பொங்கும் பாடல்களால் அர்ச்சித்தோர் எத்துணை பேர் என்று இயம்ப இயலுமா! வீரத்தின் விளையாடல்: எண்தோள் முக்கண் எம்மான் விளையாடலில் வெளிப்பட்ட
|