பக்கம் எண் :

73
 

வீரத்தை வன்தொண்டர் பல இடங்களில் விதந்தோதுவார்.

(1)பிரமன் சிரமறுத்த பெரியோன்:

'பெண்படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடழித்தான்'

(தி. 7 ப. 98 பா. 6)

'அருமலரோன் சிரம் ஒன்றறுத்தீர்'

(தி. 7 ப. 9 பா. 2)

(2)அந்தகனை வென்ற செந்தழல் வண்ணன்:

'செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனை'(-)

(3)புரமெரித்த பரமன்:

'ஏற்றார் புரமூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்'

(தி. 7 ப. 1 பா. 8)

'வெற்பார்வில் அரவுநாண் எரி அம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன்'

(தி. 7 ப. 16 பா. 5)

'திரிபுரங்கள் வேவ எய்தானை'

(தி. 7 ப. 38 பா. 7)

'திருந்தாத வாளவுணர் புரம்மூன்றும் வேவச்
சிலைவளைவித் தொருகணையால் தொழில் பூண்ட சிவன்'

(தி. 7 ப. 38 பா. 9)

(4)தக்கனைச் சாடிய அக்கரவாரத்தான்:

'பழிக்கும் பெருந் தக்கன்எச் சம்மழியப்

பகலோன்முத லாப்பல தேவரையும்

தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத் தருளுஞ்

செய்கை யென்னை கொலோ'

(தி. 7 ப. 9 பா. 7)


கொண்டாடுதல் புரியாவரு தக்கன் பெருவேள்வி
செண்டாடுதல் புரிந்தான் திருச் சுழியற் பெருமானை'

(தி. 7 ப. 82 பா. 9)