(5)சலந்தரனை வதைத்த சடைமுடியோன்: 'பிலந்தரு வாயினொடு பெரிதும்வலி மிக்குடைய சலந்தரன் ஆகமிரு பிளவாக்கிய சக்கரம்முன் நிலந்தரு மாமகள் கோன் நெடுமாற் கருள் செய்த பிரான்' (தி. 7 ப. 98 பா. 5) (6)கைம்மாவின் தோலுரித்த பெம்மான்: 'கடமா களியானை யுரித்தவனே' (தி. 7 ப. 42 பா. 7) 'கம்ப மால் களிற்றின் உரியானை' (தி. 7 ப. 55 பா. 10 'நடுங்க ஆனையுரி போர்த் துகந்தானை' (தி. 7 ப. 57 பா. 4) 'கரியானை யுரிகொண்ட கையானை' (தி. 7 ப. 59 பா. 7) (7)காமனை எரித்த கண்ணுதலோன்: 'அழிக்கவந்த காமவேளை அவனுடைய தாதை காண விழித்துகந்த வெற்றியென்னே வேலைசூழ் வெண்காடனீரே' (தி. 7 ப. 6 பா. 2) 'நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள் செய்வார்' (தி. 7 ப. 53 பா. 4) (8)காலனை உதைத்த கழலோன்: 'வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்' (தி. 7 ப. 12 பா. 1) 'அன்றாலின் நிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு' (தி. 7 ப. 28 பா. 3) 'மட்டுலா மலர் கொண்டு அடியிணை வணங்கும் மாணிதன் மேல் மதியாதே
|