கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே' (தி. 7 ப. 69 பா. 9) இந்த எட்டுத் திருவிளையாடல்களும் நடந்த வீரத்தலங்களை 'அட்டவீரட்டம்' என்று அழைப்பர். பூமன் சிரங் கண்டி அந்தகன் கோவல் புரமதிகை மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர் காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே. -தனிப்பாடல் பின்னும் இறைவனது பெருமையை விளக்கும் வீரத் திருவிளையாடல்களும் உண்டு. அடிமுடி தேடநின்ற அருட்பெருஞ் சோதி: 'மாவாய் பிளந்தானும் மலர்மிசை யானும் ஆவாஅவர் தேடித் திரிந்து அலமந்தார்' (தி. 7 ப. 13 பா. 10) 'மாலயனும் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்' (தி. 7 ப. 16 பா. 8) அலற நெரித்த அந்தி வண்ணன்: 'இலங்கையர் கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும் இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி' (தி. 7 ப. 16 பா. 7) 'எறியும் மாகடல் இலங்கையர் கோனைத் | துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக் | குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் | கோல வாளொடு நாளது கொடுத்த' | (தி. 7 ப. 55 பா. 9) |
ஆலமுண்ட நீலகண்டன்: "விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும்
|