பக்கம் எண் :

76
 

நஞ்சமுண்ட நள் ளாறனை அமுதை
நாயினேன் மறந்தென் னினைக்கேனே'

(தி. 7 ப. 68 பா. 4)

வெள்ளேறுடையானின் வீரத் திருவிளையாடல்களை இப்படிப் பாடி நம்மை மகிழ்ச்சியில் மூழ்க வைக்கிறார் சுந்தரர்.

பற்றலாவதோர் பற்றில்லை:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

-குறள் 350

என்பது தமிழ்மறை.

"திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி, ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்" (தி. 7 ப. 69 பா. 1) என்று உள்ளத்தினை வெளிப் படுத்தும் வன்தொண்டர், உலக நிலையாமையை நன்குணர்ந்து "வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்" (தி. 7 ப. 78 பா. 1) என்று பறைசாற்றுகிறார்.

நிலையாத, உலகில் நமக்குப் பற்றுக்கோடாக உள்ளவன் "அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதியே" (தி. 6 ப. 31 பா. 3) என்று அறிவுறுத்துவார்.

'மற்றுப் பற்றெனக் கின்றிநின் திருப்பாதமே மனம் பாவித்தேன்' (தி. 4 ப. 48 பா. 1) என்பது சுந்தரர் வாக்கு!

பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும்

பலரும் கண்டுஅழு தெழ வுயிருடலைப்

பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தால்

பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து

கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்

கால காலனைக் கடவுளை விரும்பிச்

செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்

சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே.

(தி. 7 ப. 64 பா. 8)