பக்கம் எண் :

77
 

தொண்டரினத்தவர் எல்லாம் ஆண்டவன் சந்நிதியில் தனித்த இடங்களைப் பெற்றுக் கொண்டனரே! நான் என்ன செய்து இனி அவனருளைப் பெறுவது என்று ஏங்கிப் பாடினார் தாயுமான அடிகள்.

கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச்
சொல்லால் துதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டனேன்
எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன்
கொல்லா விரதியர் நேர்கின்ற முக்கட் குருமணியே!

-தாயுமானவர்

"புல்நுனைப்பனி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை"

(தி. 7 ப. 60 பா. 3)

'புல்லின் நுனியில் உருண்டு திரண்ட பனியின் ஆட்சி பகலவன் வரும் வரைதானே' என்று கண்டவர்,

"ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டு

உடல்த ளர்ந்தரு மாநிதி யியற்றி

என்றும் வாழலா மெமக்கெனப் பேசும்

இதுவும் பொய்யென வேநினை யுளமே"

(தி. 7 ப. 64 பா. 5)


என்று நெஞ்சிற்குபதேசம் செய்கிறார். தனது வாழ்வை மீள்பார்வை செய்யும்போது,

மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயுந் தொண்டனெனை
அந்தர மால்விசும்பில் அழகானை யருள் புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்தான் மலையுத்தமனே!

(தி. 7 ப. 100 பா. 3)

"ஊன்மிசை உதிரக்குப்பை யொருபொரு ளிலாதமாயம்
மான்மறித் தனையநோக்கின் மடந்தைமார் மதிக்கும்இந்த
மானுடப் பிறவிவாழ்வு வாழ்வதோர் வாழ்வுவேண்டேன்!"

(தி. 7 ப. 8 பா. 2)

என்று திட்டமாய்த் தெரிவிக்கிறார். இன்பமுண்டேல் துன்பமுண்டு ஏழைமனை வாழ்க்கை - தோற்ற முண்டேல் மரணமுண்டு துயரமனை வாழ்க்கை என்பது அவரது அநுபவ வாக்கு. ஆகவே பொய்ம்மை