பக்கம் எண் :

725
 
365.நீறு நுந்திரு மேனி நித்திலம்

நீல்நெ டுங்கண்ணி னாளொடும்

கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்

திடகி லோம்பலி நடமினோ

பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்

ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்

ஆறு தாங்கிய சடைய ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

5



இருப்பவரே. காட்டில் வாழும் அழகரே, நீர் மகளிர் மனத்தைக் கவர்தற்கு, 'இயல், இசை, நாடகம்' என்னும் முத்தமிழிலும் வல்லிரோ? நும்மேனியும் அந்தி வானம் போல்வதோ? சொல்லீர், அவை நிற்க; நீர், உமது முன்கையில் பாம்பு நின்று படம் எடுத்து ஆடும்படி வந்து நிற்பது என்? இதனால், நாங்கள் கொண்டுவந்த பிச்சையை இடாது போக மாட்டேமும், இடமாட்டேமும் ஆகின்றேம்.

கு-ரை:'இப்பாம்பினை விடுத்துவாரீர்' என்றபடி, இஃது அவர் தமது முன்கையில் பாம்பினைக் கங்கணமாக அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. கொல் ஓ அசைகள். 'மேனியும் அந்தி வானமோ' என மாற்றிக்கொள்க.

5. பொ-ரை: தலைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு, 'யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்றீர்; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது. ஆயினும், கரிய நண்ட கண்களையுடைய பெண் ஒருத்தியோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர்; அதன் மேலும் நீர், கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ? சொல்லீர்; இதனால், உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம்; நடவீர்.

கு-ரை: இஃது அவரைப் பிரியாது உடன் வருகின்ற தேவியையும், அவரது சடையில் உள்ள கங்கையையும் கண்டு அஞ்சினவள் கூறியது. 'இவ்விருவரையும் விடுத்து வாரீர்' என்பது குறிப்பு. ''நித்திலம்'' என்றவிடத்து, 'போல்வது' என்பது எஞ்சி நின்றது. நீற்றழகில் திளைத்தவள், பின் தேவியைக் கண்டு அஞ்சினாள் என்க. அவ்வச்சத்தின்பின் தோன்றிய புலவியானே, 'இடகிலோம்; நடமின்'