பக்கம் எண் :

726
 
366.குரவம் நாறிய குழலி னார்வளை

கொள்வ தேதொழி லாகிநீர்

இரவும் இம்மனை அறிதி ரேஇங்கே

நடந்து போகவும் வல்லிரே

பரவி நாடொறும் பாடு வார்வினை

பற்ற றுக்கும்பைஞ் ஞீலியீர்

அரவம் ஆட்டவும் வல்லி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

6


367.ஏடு லாமலர்க் கொன்றை சூடுதிர்

என்பெ லாமணிந் தென்செய்வீர்

காடு நும்பதி ஓடு கையது

காதல் செய்பவர் பெறுவதென்

பாடல் வண்டிசை யாலுஞ் சோலைப்பைஞ்

ஞீலி யேனென்று நிற்றிரால்

ஆடல் பாடலும் வல்லி ரோசொலும்

ஆர ணீய விடங்கரே.

7



என்றாள். 'நீணெடுங் கண்ணினாள்' என்பதும் பாடம். 'சிறிது பிச்சை இடுமின்' என்ற குறிப்பெச்சம் வெளிப்படுத்தி உரைக்கப்பட்டது.

6. பொ-ரை: நாள்தோறும் பாடிப் பரவுவாரது வினைகளைப் பற்றறச் செய்யும் திருப்பைஞ்ஞீலி இறைவரே, காட்டில் வாழும் அழகரே, நீர், குராமலரின் மணத்தை வீசுகின்ற கூந்தலையுடைய மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்வதே தொழிலாய், இங்குள்ள இல்லங்களை இரவிலும் வந்து அறிகின்றீர்; அதனால், நள்ளிரவில் இங்குநின்றும் நடந்துபோகவும் வல்லீரோ? அதுவன்றிப் பாம்பு ஆட்டவும் வல்லீரோ? சொல்லீர்.

கு-ரை: இஃது, அவர் இருளிற்கு அஞ்சாராதலையறிந்து அஞ்சினவள் கூறியது. உடன் போக்கை விரும்புதலும் குறிப்பென்க.

7. பொ-ரை: காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், பாடுதலையுடைய வண்டுகள் இசையை முழுக்குகின்ற சோலைகளையுடைய திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சையிடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர்; நீர், இதழ்கள் பொருந்திய கொன்றை மலர்