368. | மத்த மாமலர்க் கொன்றை வன்னியுங் | | கங்கை யாளொடு திங்களும் | | மொய்த்த வெண்டலை கொக்கி றஃகொடு | | வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம் | | பத்தர் சித்தர்கள் பாடி யாடும்பைஞ் | | ஞீலி யேனென்று நிற்றிரால் | | அத்தி யீருரி போர்த்தி ரோசொலும் | | ஆர ணீய விடங்கரே. | | 8 |
மாலையைச் சூடுகின்றீர்; அதனோடு ஒழியாது, எலும்புகளையெல்லாம் அணிந்து என்ன பெறப்போகின்றீர்? அதுவன்றி, நும் ஊரோ, காடு; நும் கையில் இருப்பதோ, ஓடு; இவ்வாறாயின் உம்மைக் காதலிப்பவர் பெறும் பொருள் யாது? இந்நிலையில் நீர், ஆடல் பாடல்களிலும் வல்லீரோ? சொல்லீர். கு-ரை: இஃது, அவர் தம் மேனியில் எலும்பெல்லாம் அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. அவரது ஆடல் பாடல்களில் திளைத்தவள், எலும்பணிதலைக் கண்டு அஞ்சினாள் என்க, கொன்றை, அடையாள மாலையாதலோடு நறுமணம் பொருந்தியதாயும், காதலித்தார்க்குச் சூட்டுதற்கு உரித்தாயும் இருத்தலபற்றி, 'அஃது ஒக்கும்' என மகிழ்ந்தாள். 8. பொ-ரை: காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான் அடியார்களும், சித்தர்களும் பத்திமிகுதியால் திருப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஆடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லிவந்து நிற்கின்றீர்; 'ஊமத்தை, கொன்றை' என்னும் இவற்றின் சிறந்த மலர்களும், வன்னியின் இலையும், கங்கையும், பிறையும், அவற்றொடு நெருங்கிய வெண்டலையும், கொக்கிறகும், வெள்ளெருக்கும் உம் சடையிலே உள்ளன; அவைகளேயன்றி, யானையை உரித்த தோலையும் மேனிமேல் போர்த்துக் கொள்வீரோ? சொல்லீர். கு-ரை: இஃது அவர், யானைத்தோல் போர்த்திருத்தலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. 'மாமலர் மத்தக் கொன்றை' என்பதனை, 'மத்தக் கொன்றை மாமலர்' என மாற்றியுரைக்க, வெண்டலை தாருகாவனத்து முனிவர்கள் விட்டது என்பதனைக் கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்திற் காண்க 'கொக்கிறகொடு' என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் அன்று. கொக்கிறகு, கொக்குருவாய அசுரனை அழித்து
|