369. | தக்கை தண்ணுமை தாளம் வீணை | | தகுணிச் சங்கிணை சல்லரி | | கொக்க ரைகுட முழுவி னோடிசை | | கூடிப் பாடிநின் றாடுவீர் | | பக்க மேகுயில் பாடுஞ் சோலைப்பைஞ் | | ஞீலி யேனென்று நிற்றிரால் | | அக்கும் ஆமையும் பூண்டி ரோசொலும் | | ஆர ணீய விடங்கரே. | | 9 |
370. | கையொர் பாம்பரை யார்த்தொர் பாம்பு | | கழுத்தொர் பாம்பவை பின்புதாழ் | | மெய்யெ லாம்பொடிக் கொண்டு பூசுதிர் | | வேதம் ஓதுதிர் கீதமும் |
அணிந்தது. ''சடைய'' என்ற விடத்து நின்ற, ''தாம்'' என்பது அசைநிலை. 'வெள்ளெருக்கு நுஞ்சடையவாம்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 9. பொ-ரை: காட்டில் வாழும் அழகரே, நீர், 'யான், எப்பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்று சொல்லி வந்து நிற்கின்றீர். நீர், 'தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு குடமுழா' என்னும் இவற்றொடு கூடி, பல இசைகளைப் பாடிக்கொண்டு முன்வந்து நின்று ஆடுவீர்; ஆயினும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டீரோ? சொல்லீர். கு-ரை: இஃது, அவர், எலும்பும் ஆமையோடும் அணிதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. அவரது இசையிலும், கூத்திலும் திளைத்தவள், எலும்பையும், ஆமையோட்டையும் கண்டு அஞ்சினாள் என்க. தக்கை முதலாக, குடமுழா ஈறாகச் சொல்லப்பட்டவை. வாச்சிய வகைகள். 10. பொ-ரை: தலைவரே, காட்டில் வாழும் அழகரே, உமக்குக்கையில் ஒரு பாம்பு; அரையில், கட்டிய ஒரு பாம்பு; கழுத்தில் ஒரு பாம்பு; அவையெல்லாம் பின்புறமும் ஊர்கின்ற மேனி முழுவதும் நீற்றினால் பூசியுள்ளீர்; அதனோடு வேதம் ஓதுகின்றீர்; இவற்றோடு
|