| பைய வேவிடங் காக நின்றுபைஞ் | | ஞீலி யேனென்றீ ரடிகள்நீர் | | ஐயம் ஏற்குமி தென்கொ லோசொலும் | | ஆர ணீய விடங்கரே. | | 10 |
371. | அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியில் | | ஆர ணீய விடங்கரை | | மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர் | | வேண்டிக் காதல் மொழிந்தசொல் | | மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன் | | றொண்டன் வாய்மொழி பாடல்பத் | | துன்னி இன்னிசை பாடு வார்உமை | | கேள்வன் சேவடி சேர்வரே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
இசையும் உம்மிடத்தில் மெல்ல அழகியதாய்த் தோன்ற வந்து நின்று, 'யான் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன்; சிறிது பிச்சை இடுமின்' என்கின்றீர்; பிச்சை எடுக்கும் இக்கோலம் எத்தன்மையதோ? சொல்லீர். கு-ரை: பிச்சைக்கு வருவோர் இவ்வாறு பாம்புகளை உடம்பெங்கும் அணிந்துவருதல் கூடாது என்றபடி. இஃது, அவர் கை முதலியவற்றில் பாம்பை உடையவராதலைக் கண்டு அஞ்சினவள் கூறியது. 11. பொ-ரை: அன்னங்கள் தங்குகின்ற வயல்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகராகிய இறைவரை, தோன்றி மறைகின்ற நுண்ணிய இடையினையுடைய மங்கையர் பலர் காதலித்து அக் காதலை வெளிப்படுத்திய சொற்களையுடைய, நிலைபெற்ற பழைய புகழினையுடைய திருநாவலூரில் தோன்றினவனாகிய வன்றொண்டனது வாய்மொழியான இப்பாடல்கள் பத்தினையும், மனத்தில் புகக்கொண்டு, இனிய இசையாற் பாடுபவர், உமாதேவிக்குக் கணவனாகிய சிவபிரானது செவ்விய திருவடியை அடைவர். கு-ரை: பாடலை மனம்புகச் செய்தலை, 'மனனம் செய்தல்' என்பர். பாடல்களை ஒருவர் சொல்லக் கேட்டுப் பாடுவதிலும், தாம் அறிந்து பாடும்பொழுதே இசை இனிதாய் அமையும் என்க.
|