389. | வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு | | மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம் | | பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத் | | தெண்டோள்எம் பெருமானைப் பெண்பாகம் ஒருபால் | | செய்தானைச் செக்கர்வா னொளியானைத் தீவாய் | | அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ | | எய்தானை எறிகெடில வடவீரட் டானத் | | துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே. | | 7 |
போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! கு-ரை: 'எம்பெருமான்' என்றவிடத்தும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபு விரிக்க. 'தலைமகன்' என்றது, 'தலைவன்' என்னும் பொருட்டாய் நின்றது. 'எம்மானை மதகரியின்' என்பது பாடம் அன்று. 'வேத விதியாய் உள்ளவன்' என்றது, அவற்றின் பயனைத் தருவோனாதல் பற்றி. மதியும், பாம்பும் ஒன்றை யொன்று அஞ்சுவனவாகக் கூறுதல், புனைந்துரை வழக்கு. 7. பொ-ரை: கொடிதாகிய, 'வினை' என்னுங் கடலில் வீழ்ந்து தடுமாறும் எத்துணையோ உயிர்கட்குப் பெரிதும் இரங்கித் தனது திருவருளைக் கொடுத்து வீடுபேறாகிய நலத்தை வழங்கினவனும், தலைக்கோலங்களை உடையவனும், மைபோலுங் கண்டத்தையும், எட்டுத் தோள்களையும் உடைய எம்பெருமானும், தனது திருமேனியின் ஒரு கூற்றைப் பெண் கூறாகச் செய்தவனும், செவ்வானத்தின் ஒளி போல் பவனும், தீதாகிய வாயினையுடைய பாம்பு படமெடுத்து ஆடுகின்ற சடையையுடையவனும், மூன்று ஊர்கள் வெந்தொழியுமாறு அம்பை எய்தவனும், அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிது போதினும், யான், அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! கு-ரை: திருவருளாவது, ஞானம். 'வீடுபேற்றாக்கம்' என்பது, தொகுத்தலாயிற்று. எத்துணையோ உயிர்கட்கு அருள் புரிந்தமை, காட்சியானும் கேள்வியானும் அறியப்பட்டதென்க. ஞவிலும், உவம உருபு.
|