| மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் | | எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் | | அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன் | | ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | | 2 |
395. | மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன் | | முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் | | செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன் | | திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் | | மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க | | வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த | | அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் | | ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | | 3 |
மலை மலிந்த - மலைத் தன்மை (பெருமையும், வலிமையும்) நிறைந்த. எஞ்சாத - தொண்டினை முட்டாது செய்த. 'மங்கை' என்பது 'மங்கலம்' என்பதன் மரூஉ. இஃது, ஊர்ப்பெயர். 3. கு-ரை: ''மும்மை'' என்றது ''இருமை வகை தெரிந்து'' (குறள்-23) என்றாற்போல, 'மூன்று' எனப் பொருள் தந்தது. மூன்றாவன: திருநீற்றுப்பூச்சு, கண்டிகைக் கலன், சடைமுடி என்பன. செம்மையே போவான் - பிறழாது நின்ற உள்ளத்தோடே போவான். மெய்ம்மையே - இப்பிறப்புப் பிள்ளைமைப் பருவத்து விளையாட்டானேயன்றி, முற்பிறப்பில் வழிபட்ட தொடர்ச்சியானே. ''திருமேனி'' என்றது, இலிங்கத் திருமேனியை. வெகுண்டது, அவரது நிலையை அறியாமையால் என்க. எழுந்த - பல தவறுகளைச் செய்ய எழுந்து, அங்ஙனமே செய்த. அம்மையான் அடி - வீடுபேற்றைத் தரும் முதல்வனது அடியையே பொருளாக அடைந்த. ''அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக் கொண்ட - செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார்'' (தி.12 சண்டேசுரர் புரா. 15) என்ற சேக்கிழாரது திருமொழியைக் காண்க.
|