பக்கம் எண் :

757
 
396.திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன்

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன்

அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

4

 
397.வம்பறா வரிவண்டு மணநாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்



4. கு-ரை: திரு - இன்பம். 'அது நிலைத்து நிற்றலாகிய செம்மையே உண்மைச் செம்மையாம்' எனக் கொண்டவர் திருநாவுக்கரசர் என்க. பிறப்பில் பெருமானாதலின், அத்தகைய செம்மையையுடைய செம்பொருளாவான் சிவபெருமானே என்பது கருத்து. இஃது அவனது திருமேனிக் குறிப்பாலும், 'சிவன்' என்னும் பெயராலுமே நன்கறியப்படும் என்பார், ''சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்'' (தி.4 ப. 112 பா.9) என அவர் ஓர் இடத்தில் அருளிச்செய்தார். ''திருநின்ற செம்மை'' என்பது, இந் நாயனார் அருளிச்செய்த தொடராதலை யறிக. (தி. 4 ப.8 பா.1)

பெருநம்பி - நம்பிகளுட் சிறந்தவர். அமைச்சராய் இருந்தும் அடியவர்க்கு அடிமை செய்தவர்; சைவப் பயிர்க்கு உளவாய் இருந்த களையைக் களைந்தவர்.

ஒருநம்பி - ஒப்பற்ற நம்பி; இறைவனது திருவருளை ஆசிரியராலே அடைந்தவர். சாத்த மங்கை, ஊர்ப்பெயர். அருநம்பி - அரிய செயலைச் செய்த நம்பி; நீரால் திரு விளக்கை ஒருநாள் ஒருபொழுதன்றி, எந்நாளும் எப்பொழுதும் இட்டவர்.

5. கு-ரை: வம்பு அறா வரிவண்டு - நறுமணத்தை விட்டுப் போகாத, வரிகளையுடைய வண்டுகள். 'வண்டிற்கு' என நான்காவது விரிக்க. 'நாறுமாறு மலரும் மலர்' என இயையும். 'மலர்க்கொன்றை'