பக்கம் எண் :

758
 
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

5


398.வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

சீரகொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

6

 

399.பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன்



என்றதனை, 'கொன்றை மலர்' என.மாற்றியுரைக்க. சிவபிரான் ஒருவனுக்கே உரிய சிறப்பு மாலையாகலின், ''நற்கொன்றை'' என்று அருளினார். ''கைச்சிறு மறியவன் கழலலாற்பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன்'' (தி.1 ப.77 பா.11) என அவர் ஓதியதனையே எடுத்தோதியருளினார் என்க. சிவபிரானால் ஆகமத்தைத் தமிழாற் செய்யத் தமிழகத்தில் வருவிக்கப்பெற்று அங்ஙனமே செய்தருளிய ஆசிரியராகலின், ''நம்பிரான்'' என்று அருளிச்செய்தார். நாட்டம் மிகு - பிறவியில் கண்ணில்லாதவராய் இருந்து, சமணர் முன்னே சிவபிரானது திருவருளாற் கண்பெற்று விளங்கியவர். அம்பர், ஊர்ப்பெயர்.

6. கு-ரை: வார் - கச்சு, வனம் - அழகு. சீர் - சிறப்பு. கார்கொண்ட - மேகம் போன்ற. ஆர் - கூர்மை. களந்தை, ஊர்ப் பெயர்.

7. கு-ரை: பொய்யடிமை யில்லாத புலவர், தொகையடியார், துஞ்சிய - இறைவன் திருவடியிற் சென்று தங்கிய. நாகை - நாகப்பட்டினம். வரிசிலை - கட்டப்பட்டு அமைந்த வில். கழல் - காலில் அணியும் அணி. வரிஞ்சை - ஊர்ப்பெயர். 'வரிஞ்சையர்கோன் கழற் சத்தி' என மாற்றி உரைக்க.