பக்கம் எண் :

759
 
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

7


400.

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

8


401.

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

9



 அணியும் அணி. வரிஞ்சை - ஊர்ப்பெயர். 'வரிஞ்சையர்கோன் கழற் சத்தி' என மாற்றி உரைக்க.

8. கு-ரை: காப்புக் கொண்டிருந்த - தமக்குப் பாதுகாவலாக உணர்ந்திருந்த. நிறை - நெஞ்சைத் தீ நெறியிற் செல்லாது நிறுத்துதல். நெல்வேலி வென்ற - திருநெல்வேலியில், அயல்நாட்டு அரசரை வென்ற. மயிலை - மயிலாப்பூர். அறை - அறுத்தல். ''நிறைக்கொண்ட'' முதலிய மூன்றிலும் ககர ஒற்று, விரித்தலாயிற்று.

9. கு-ரை: மடல் - இதழ். தார் - மாலை, அதள், தோல். ''ஆடி''