402. | பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் | | பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் | | சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் | | திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் | | முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் | | முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் | | அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் | | ஆருரன் ஆரூரில் அம்மானுக் காளே. | | 10 |
403. | மன்னியசீர் மறைநாவன் நீன்றவூர்ப் பூசல் | | வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் | | தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன் | | திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் | | என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் | | இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் | | அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் | | ஆருரில் அம்மானுக் கன்பரா வாரே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
என்றது பெயர். அடல் - வெற்றி. 10. கு-ரை: இத்திருப்பாடலில் அருளிச்செய்யப்பெற்றவர் அனைவரும், தொகையடியார்கள். 11. கு-ரை: என்னவன் - எனக்கு உரியவன். காதலன் - மகன். 'சடையன், இசைஞானி இவர்க்கு மகன்' என்க. 'காதலனும், கோனும் ஆகிய அத்தன்மையுடையவனாம் நம்பியாரூரன்' என்க. உவப்பார் - அன்பால் மனம் உருகுகின்றவர்கள்.
|