பக்கம் எண் :

763
 
406.

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை

இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்

சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்

சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை

அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி

அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே

கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

3


407.

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்

புனலாகி யனலாகிப் பூதங்கள் ஐந்தாய்

நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி

ஞாயிறாய் மதியமாய் நின்றஎம் பரனைப்



3. பொ-ரை: வலிமை மிகுந்த மூன்று இலைகளை உடைய சூலத்தை உடையவனும், இறைவனும், வேதத்தை ஓதுபவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை மாலையோடு, வெள்ளிய சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை ஏறுபவனும், 'சுயஞ்சோதி' எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை, அடியேன், அன்னப்பறவைகள், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்ற தாமரையினது ஒப்பற்ற மலர்களின்மேல் ஏறி விளையாடுகின்ற, அகன்ற நீர்த்துறையின் அருகே கரும்புகள் வளரப்பட்டு, செந்நெற்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!

கு-ரை: 'இரும்பு' என்றது, அதன் தன்மையாகிய திட்பத்தைக் குறித்தது. இறைவனுக்கு உரிய எட்டுக் குணங்கள் இவை என்பதை ஆறாந் திருமுறைக் குறிப்பிற் காண்க. ''என்னும்'' என்றதனால், ''சோதி'' என்பது, அப்பொருட்டாயிற்று. ஆகவே சிறப்புப் பெயராய், 'ஒளி' என்பதன் பொதுமை நீக்கிற்று.

4. பொ-ரை: பூளைப் பூவையும், அழகிய கொன்றை மாலையையும், புரித்த சடையின்கண் உடையவனும், நீராகியும், நெருப்பாகியும், ஐம்பூதங்களாகியும், 'நாளை, இன்று, நேற்று' என்னும் நாள்களாகியும், பரவெளியாகியும், சூரியனாகியும், சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள்