பக்கம் எண் :

764
 
பாளைபடு பைங்கமுகின் சூழல்இளந் தெங்கின்

படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்

காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

4


408.

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்

தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை

முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை

முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை

இரக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் ங்கும்

வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்

கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்

கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

5



இறைவனை, அடியேன், பாளைகள் உளவாகின்ற, பசிய கமுகுகளினது செறிவினிடத்தே உள்ள இளமையான தென்னையினது, மிக்க மயக்கத்தை உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து இசையைப் பாட, மயில்கள் ஆடுகின்ற, உயர்ந்த சோலையையுடைய, திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!

கு-ரை: பூளைப் பூவையும் சிவபிரான் அணிதல் இத்திருப்பாடலாற் பெறப்படுகின்றது. முன்னே, ''பூதங்கள் ஐந்தாய்'' என்றமையின், ''ஆகாயம்'', பரவெளியாயிற்று. இளம் பருவத்து ஆடவரைக் குறிக்கும் 'காளை' என்பது, வண்டிற்கு உவமையாகு பெயராய் வந்தது. அதனானே, அது அஃறிணை இயற்பெயராய்ப் பன்மைப் பொருளும் தருவதாயிற்று.

5. பொ-ரை: சீறுகின்ற வாயினையும், பசிய கண்களையும் உடைய, வெள்ளிய பாம்பினை அரையிற் கட்டியவனும், தேவர்கள் முடியிற் பதிக்கும் மணிபோன்றவனும், சிவந்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையவனும், முருக்கமரத்தின்கண் பொருந்தியுள்ள மலர்போலும் திருமேனியை உடையவனும், எல்லாவற்றிற்கும் சான்றாய் நிற்பவனும், உலகமுழுதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன், எழுவகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள்