409. | விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை | | வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும் | | அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய | | சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள் | | உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக் | | குங்குமங்க ளுந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல் | | கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக் | | கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. | | 6 |
வேள்வி வேட்டிருத்தலால், அவர்கட்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் எல்லாம், கருக்குவாயினையுடைய பனைமரங்களும், தென்னை மரங்களும் நிறைந்த சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு! கு-ரை: செருக்குறுதலாகிய செருக்குதல் என்பது, வெகுளுதலைக் குறித்து, அதன் காரியமாகிய சீறுதலைக் குறித்தது. பெரும் பாம்புகளின் வயிறு வெண்மையுடையதாதலின், ''வெள்ளரவு'' என்றார். ''முன்னிலை'' என்பது இப்பொருட்டாதலை, ''யார்க்கும் முனமொரு தெய்வம் எங்குஞ் செயற்கு முன்னிலையா மன்றே'' என்ற சிவஞான சித்தி (சூ-2.24)யாலும் அறிக. ''எங்கும்'' என்பது பெயர்த்தன்மைத்தாதலின், 'உள்பொருள்' என்றாற்போல, ''உள்எங்கும்'' என்றார். தேவர்களும் வந்து சூழ்தலின், எழுபிறப்பும் உள வாயின. 'இரு பிறப்புள்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். 6. பொ-ரை: எருதினை எழுதிய ஒலிக்குங் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும், நீரில் துயில்கின்ற திருமாலும், வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும், அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய, 'சங்கரன்' என்னும் காரணப் பெயரை உடையவனும், மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை, அடியேன், இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும், மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடநதியின் கரைமேல் உள்ள, கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச்
|