410. | அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் | | அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத் | | திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் | | தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக் | | குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் | | கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேல் | | கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் | | கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. | | 7 |
சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு. கு-ரை: கொடி காற்றினால் ஒலிப்பது என்க. 'காண' என்னும் செயவெனெச்சம், தொழிற் பெயர்ப் பொருள் தந்தது. 'ஆய' என்னும் பெயரெச்சம், 'சங்கரன்' என்னும் பிறபெயர் கொண்டது; இஃது ஏதுப்பெயராம். 'மடத்தையலார்கள்' எனப்பிரித்துக் கூட்டுக. 'கோதைக் குழல்' எனக் கூட்டப்படும். ''கடைகள்'' என அஃறிணையாகக் கூறியது பான்மை வழக்கு. 7. பொ-ரை: அரிய மணியாகிய மாணிக்கம் போல்பவனும், முத்துப்போல்பவனும், ஆனைந்தினை ஆடுகின்ற தேவர் பெருமானும், அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகிய பிற மணிகள் போல்பவனும், இனிய கரும்பினின்றும் வடிதலையுடைய மிக்க சாறுபோல்பவனும், அறிதற்கரிய மணியாகிய சிந்தாமணி போல்பவனும், மாற்று விளங்குகின்ற செம்பொன் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன் முன்னே, நிறம் பொருந்திய மணிகளைக் கொழித்து மலையினின்றும் பாய்ந்து, பின்பு நிலத்தில் சுழித்துக் கொண்டு ஓடுகின்ற, அலைகளுக்கிடையில், வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர் மூழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள, நீலோற்பல மலர்கள் நீலமணிபோல மலர்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு! கு-ரை: ஆனஞ்சு - பஞ்சகௌவியம்; இவை இன்ன என்பதனை, ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க.
|