411. | இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின் | | ஈசன்தன் எண்டோள்கள் வீசிஎரி யாடக் | | குழைதழுவு தருக்காதிற் கோளரவ மசைத்துக் | | கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத் | | தழைதழுவு தண்ணிறத்த செந்நெலத னயலே | | தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே | | கழைதழுவித் தேன்தொடுக்குங் கழனிசூழ் பழனக் | | கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. | | 8 |
412. | குனியினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக் | | குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப் | | பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப் | | பலஉருவுந் தன்னுருவே யாயபெரு மானைத் |
8. பொ-ரை: பாம்பாகிய அணிகலமும், அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினையுடைய கடவுளும், தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு, குழைபொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு, உடையைக் கோவணமாக உடுத்த அழகனும், கங்கை நீராற் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், தழைத்தலையுடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில், பெரிய முத்துக்களை யுடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு! கு-ரை: ''இழை'', ''ஈசன்'' என்றவிடத்தும், எண்ணும்மை விரிக்க. தண்மை, இங்குப் பசுமை மேற்று. 9. பொ-ரை: வளைந்த இனிய ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும், வண்டுக் கூட்டங்கள் பாட, நீர்த்துளிகள் சிந்துகின்றதுமாகிய சடையினையும், குண்டலம் பொருந்திய காதினையும் உடையவனும், பால்போலும் வெள்ளிய. நீற்றை அணிந்தவனும், எல்லா உருவங்களும் தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன், தூய நீலோற்பலங்கள், ஊடலிலும் இனியனவாயும்
|