| துனியினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார் | | தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே | | கனியினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக் | | கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. | | 9 |
413. | தேவியம்பொன் மலைக்கோமான் றன்பாவை யாகத் | | தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான் | | மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு | | மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத் | | தூவியவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத் | | துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக் | | காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் | | கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. | | 10 |
தூயனவாயும் தோன்றும் மொழிகளையும், கொவ்வைக் கனிபோலும் வாயினையும் உடைய அழகிய பெண்கள்போலக் கண்வளர்கின்ற, நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள, பழங்களைப் பழுத்த, இனிய வாழைத் தோட்டங்களைப் பொருந்தியுள்ள சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு! கு-ரை: 'குனிவினிய, துனிவினிய, கனிவினிய' எனப்பாடம் ஓதுவர், பலவுருவும் தன்னுருவேயாதல், 'எல்லாம் சிவன்' என்ன நிற்றல். ''துனியினிய தூய மொழித் தொண்டைவாய் நல்லார்'' என்றதனை, ''ஊடினும் இனிய கூறும்'' (பதிற்று-16) என்பதனால் அறிக. 'நல்லாரையுடைய சோலை' என்று இயைத்தலுமாம். ''பொழிற் சோலை'' ஒருபொருட் பன்மொழி. 10. பொ-ரை: அழகிய பொன்மலைக்கு அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க, அவளைத் தனது திருமேனியில் ஒருபாகமாகச் சேர்ந்திருக்கும்படி வைத்த பெருமானும், பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில் வீழாதபடி நமக்கு மெய்ந்நெறியைக் காட்டுகின்ற, வேதத்தால் துணியப்பட்ட முதற்கடவுளும் ஆகிய இறைவனை, சிறகுகள் வாய்ந்த நாரைகளும், குருகுகளும் பறந்து ஒலிக்க, நீர்த்துறைகளில் கெண்டை பிறழ, பிற மீன்கள் துள்ளி விளையாட, குவளைப்பூவின் கண் வண்டுகள் பலவகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களை
|