பக்கம் எண் :

769
 
414.திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்

செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்

கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்

கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது

உரையினார் மதயானை நாவலா ரூரன்

உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்

வரையினார் வகைஞால மாண்டவர்க்குந் தாம்போய்

வானர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

11

திருச்சிற்றம்பலம்


யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!

கு-ரை: 'தூவியவாய' என்னும் அகரம் தொகுத்தலாயிற்று. ''கயல்'' என்றது, 'மீன்' என்னும் அளவாய் நின்றது.

11. பொ-ரை: புகழ்மிகுந்து, மதம் பொருந்திய யானையையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், அலையால் நிறைந்த கடல்சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும், செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை. கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி, வணங்கப்பெற்ற அவ்வுரிமையினால் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள், எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய், பின்புசென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர்.

கு-ரை: அரசத்திருவும் உடையவராகலின், ''மதயானை ஆரூரன்'' என்று அருளினார். வரையினார் வகை, பலப்பல நாடுகள், 'தலைவராய்' என்றதனை, ''ஆண்டவர்க்கும்'' என்பதனோடுங் கூட்டுக. 'அவர்தாம்' என்பன அசைநிலைகள்.