| கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் | | கண்டால் அடியார் கவலாரே | | அதுவே யாமா றிதுவோ கச்சூர் | | ஆலக் கோயில் அம்மானே. | | 1 |
416. | கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் | | கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென் | | றுச்சம் போதா ஊரூர் திரியக் | | கண்டால் அடியார் உருகாரே | | இச்சை யறியோம் எங்கள் பெருமான் | | ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய் | | அச்ச மில்லாக் கச்சூர் வடபால் | | ஆலக் கோயில் அம்மானே. | | 2 |
பெருமானே, நீ சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உண் அடியவர் கவலைகொள்ளாரோ? கு-ரை: வடுப்பட்ட கது வாய் - வடுப்படல்; ''களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின்'' என்றது (பதிற்று - 15) காண்க. ''தலை'' என்றது, 'மண்டை' எனப் பொருள் தந்து, அப்பெயரையுடைய ஓட்டினைக் குறித்தது; ''கவிழ்ந்த மண்டை மலர்க்குநர்யாரென'' (புறம்-103) என்றாற்போல்வன காண்க. 'முரிந்த வாயையுடையது' என்றது, ஓட்டின் இழிபுணர்த்தும் அளவாய் நின்றது, ''பித்தவுலகர்'' (திருவாசகம் - போற்றி. 36.) என்றாற்போல. ''அடியார்'' எனத் தம்மைப் பிறர்போல அருளினார் என்க. ''அது'' என்றது, பண்டறி சுட்டாய், இறைவனது கருணையைக் குறித்தது என்பதைச் சேக்கிழார் திருமொழியான் அறிக (தி,12ஏ.கோ.பு-182). இஃது எல்லாத் திருப்பாடல்களின் ஈற்றிலும் சென்று இயையும். ''அதுவே'' என்னும் ஏகாரம் பிரிநிலை. சிறப்பு ஓகாரத்தை, ''ஆமாறு'' என்றதனொடு கூட்டுக. 'கச்சூர்' என்பது, தலத்தின் பெயர்; 'ஆலக்கோயில்' என்பது கோயிலின் பெயர். 2. பொ-ரை: எங்கள் பெருமானே, இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே, திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே, நீ, அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி, கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க, பிச்சைக் கென்று, ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால், உன் அடியவர்
|