418. | விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் | | மின்னேர் உருவத் தொளியானே | | கடையும் புடைசூழ் மணிமண் டபமுங் | | கன்னி மாடங் கலந்தெங்கும் | | புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் | | பூமேல் திருமா மகள்புல்கி | | அடையுங் கழனிப் பழனக் கச்சூர் | | ஆலக் கோயில் அம்மானே. | | 4 |
419. | மேலை விதியே விதியின் பயனே | | விரவார் புரமூன் றெரிசெய்தாய் | | காலை யெழுந்து தொழுவார் தங்கள் | | கவலை களைவாய் கறைக்கண்டா | | மாலை மதியே மலைமேல் மருந்தே | | மறவே னடியேன் வயல்சூழ்ந்த | | ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் | | ஆலக் கோயில் அம்மானே. | | 5 |
4. பொ-ரை: இடப வாகனத்தையும், இடபக்கொடியையும், சடை முடியையும் உடையவனே, திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே, எங்கும், அழகியவாயில்களையும், நிறைந்த மணிமண்டபங்களையும், அழிவில்லாத மாடங்களையும் கொண்டு, சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும், நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால், தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற, வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள, ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, இஃது உன்கருணை இருந்தவாறேயோ! கு-ரை: ''விடையும் கொடியும்'' என்றது, ஆற்றலாற் பொருளுணர நின்றது. கன்னிமாடம், கன்னியர் உறையும் மாடம் என்பாரும் உளர். ''கலந்து'' என்ற எச்சம், எண்ணின்கண் வந்தது. 'தழுவுதலால்' என்பது, 'தழுவி' என வந்தது. 'அடையும் கச்சூர்' என இயையும். 5. பொ-ரை: மேம்பட்டதாகிய அறநெறியாயும், அதன் பயனாயும் உள்ளவனே, பகைவரது திரிபுரங்களை எரித்தவனே,
|