பக்கம் எண் :

775
 
421.பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்

அதுவும் பொருளாக் கொள்வானே

மெய்யே எங்கள் பெருமான் உன்னை

நினைவா ரவரை நினைகண்டாய்

மையார் தடங்கண் மடந்தை பங்கா

கங்கார் மதியஞ் சடைவைத்த

ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்

ஆலக் கோயில் அம்மானே.

7


422.ஊனைப் பெருக்கி உன்னை நினையா

தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்

கானக் கொன்றை கமழ மலருங்

கடிநா றுடையாய் கச்சூராய்



7. பொ-ரை: மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே, கங்கையையும், ஆத்திப் பூவையும், சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே, செம்மைநிறம் உடையவனே, வெண்மைநிறம் உடையவனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும், அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே, எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை.

கு-ரை: 'நினைத்து அவர் வருந்தாதவாறு, இரத்தலை விட்டொழி' என்றதாம். 'ஒழியாத இஃது உன் கருணை இருந்த வாறேயோ!' என, ஈண்டும் வந்து இயையும் என்க: பொய்யே புகழ்தலாவது, அன்பானன்றி, ஒரு பயன் கருதிப் புகழ்தல், அது பின் அன்பு உண்டாதற்கு வழியாதல்பற்றி, அதனையும் இறைவன் ஏற்று அருளுவன் என்க. 'கங்கை' என்பதன் ஈற்று ஐகாரம், தொகுத்தலாயிற்று. 'கங்கா நதியம்' என்பதும் பாடம். சிவபிரானுக்கு வெண்மை நிறமும் கூறப்படும். மிக்க நெருப்பு வெண்மையாதலும் அறிக. இனி, 'வெண்மை, நீற்றினால் ஆயிற்று' எனினுமாம்.

8. பொ-ரை: காட்டில் உள்ள கொன்றை மலர், மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே, மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே, உயிர்களுக்கு