| மானைப் புரையு மடமென் னோக்கி | | மடவா ளஞ்ச மறைத்திட்ட | | ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் | | ஆலக் கோயில் அம்மானே. | | 8 |
423. | காதல் செய்து களித்துப் பிதற்றிக் | | கடிமா மலரிட் டுனையேத்தி | | ஆதல் செய்யும் அடியார் இருக்க | | ஐயங் கொள்ளல் அழகிதே | | ஓதக் கண்டேன் உன்னை மறவேன் | | உமையாள் கணவா எனையாள்வாய் | | ஆதற் கழனிப் பழனக் கச் சூர் | | ஆலக் கோயில் அம்மானே. | | 9 |
ஞானக்கண்ணாய் விளங்குபவனே, திருக்கச்சூரில் உள்ளவனே, ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மையுடையேனும், அறிவில்லாதேனும் ஆகிய யான், உடம்பை வளர்க்கும் செயலில் நின்று, உன்னை நினையாது விட்டேன். கு-ரை: 'எனக்கும் இது செயற்பாலதோ' என்பதனையும் இங்கு உடன்கூட்டியுரைக்க ''ஞானக் கண்ணாய்'' என்றதற்கு, 'ஞானக் கண்ணில் விளங்குபவனே' என்று உரைப்பினும் ஆம். 9. பொ-ரை: உமையம்மைக்குக் கணவனே, உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே, விளைதலையுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, உன்பால் பேரன்புகொண்டு, அதனால் இன்பம்மீதூரப்பெற்று, தம்மையறியாது வரும் சொற்களைச் சொல்லி, மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க, நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ? ஆகாதன்றே? கு-ரை: ''ஆதல்'' இரண்டனுள் முன்னது, உயர்தல்; பின்னது, விளைதல். உயர்தலாவது, வீடுபெறுதல். 'பழனக் கழனி' என்பதும் பாடம்.
|