பக்கம் எண் :

778
 

42. திருவெஞ்சமாக்கூடல்

பதிக வரலாறு:

நம்பியாரூரர், கொங்குநாட்டில் காஞ்சி என்னும் ஆற்றின் கரையில் உள்ள பேரூரில், திருக்கோயிலை வலம்வநது திருமுன்சென்ற பொழுது, பெருமான், தில்லையில் நடனம் செய்யும் திருக்கோலத்தைக் காட்டக் கண்டு, தொழுது நீங்கி, அருளால் மலை, காடு, நதி இவற்றைக் கடந்து பல பதிகளையும் வணங்கித் திருவெஞ்சமாக்கூடற் பெருமானைத் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 92)

குறிப்பு: இத் திருப்பதிகம், இத்தலத்தைப் பெரிதும் புகழ்ந்து, தம்மையும் விரும்புமாறு இறைவரை வேண்டிநின்று அருளிச் செய்தது. ''பரமர்தம் பதிபல பணிந்து - மேயவண்டமிழால் விருப்பொடும் பரவி, வெஞ்சமாக் கூடலும் பணிந்து'' (தி.12 ஏ.கோ.புரா.92.) எனச் சேக்கிழார், செய்யுட்கேற்றவாறு அருளினாராயினும். 'வெஞ்சமாக் கூடலும் பணிந்து, மேய வண்டமிழால் விருப்பொடும் பரவி' என்றருளுதலே கருத்து எனக்கொள்க. ''விருப்பு'' என்றது, அடியார்களுள் தாமும் ஒருவராதலை விரும்பி, இறைவரை, ''அடியேனையும் வேண்டுதி'' என வேண்டினமையை.

பண்: கொல்லிக்கௌவாணம்

பதிக எண்: 42

திருச்சிற்றம்பலம்

425.

எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தம்மோ

டேலம்மில வங்கந்தக் கோலம்இஞ்சி

செறிக்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்

திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்

முறிக் குந்தழை மாமுடப் புன்னைஞாழல்

குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா

வெறிக்குங்கலை மாவெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

1



1. பொ-ரை: மூங்கிலினின்றும் உதிர்ந்த, ஒளிவீசும், முத்துக்களோடு, 'ஏலம், இலவங்கம், தக்கோலம், இஞ்சி' என்பவைகளை, எவ்விடங்களையும் நிரப்புகின்ற நீருள் இட்டுக்கொண்டு, கரையை