பக்கம் எண் :

793
 
447.தூறன்றி யாடரங் கில்லை

யோசுட லைப்பொடி

நீறன்றிச் சாந்தமற் றில்லை

யோஇம வான்மகள்

கூறன்றிக் கூறாவ தில்லை

யோகொல்லைச்சில்லைவெள்

ளேறன்றி யேறுவ தில்லை

யோஎம் பிரானுக்கே.

2


448.தட்டெனுந் தட்டெனுந் தொண்டர்

காள்தடு மாற்றத்தை

ஒட்டெனும் ஒட்டெனு மாநி

லத்துயிர் கோறலைச்



கு-ரை: 'உளதாகவும், ஏன் இவ்வாறு செய்கின்றான்?' என நினைந்தவாறாம். 'தனக்கென ஒன்றையும் வேண்டுதலும் முயலுதலும் இல்லாதவனாகலின், அவனது செய்கைகளுக்குக் காரணம் இதுவென நாம் எங்ஙனம் வரையறுத்துக் கூறுதல்கூடும்' என்றபடி. 'முடிப்பது, செற்றது' என்பன இங்கு அவ்வத்தொழில் மேல் நின்றன. 'கணையால்' நூறினார் என்க. ''கடிப்பதும்'' உம்மீற்று வினையெச்சம்.

2. பொ-ரை: எம் பெருமானுக்கு, ஆடுகின்ற அரங்கு, காடன்றி வேறு இல்லையோ! சாந்து, சுடலைப்பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ! தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது மலையரையன் மகளது கூறன்றி வேறு இல்லையோ! ஏறுவது, முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ!

கு-ரை: காட்டினை, 'தூறு என்று அருளினார், சாம்பல்தான் பல விடத்துண்மையின், 'சுடலைப்பொடியாகிய நீறு' என்றார். பெண்ணொரு கூறாதல் பெருமை தாராமையின், வேறு கூறு இல்லையோ என்றார். 'கூறுவது' என்பது பாடம் அன்று. சிறுமை யாவது, யானை முதலியனபோலப் பெருமையுடைய தாகாமை.

3. பொ-ரை: மன அலைவையும், எல்லாப் பொருட்கும் நிலைக் களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே, மேலானவனும்,