பக்கம் எண் :

794
 
சிட்டன் திரிபுரஞ் சுட்ட

தேவர்கள் தேவனை

வெட்டெனப் பேசன்மின் தொண்டர்

காள்எம் பிரானையே.

3


449.நரிதலை கவ்வநின் றோரி

கூப்பிட நள்ளிருள்

எரிதலைப் பேய்புடை சூழ

வாரிருட் காட்டிடைச்

சிரிதலைமாலை சடைக்க

ணிந்தஎஞ் செல்வனைப்

பிரிதலைப் பேசன்மின் தொண்டர்

காள்எம் பிரானையே.

4



திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை, வெறுத்துப் பேசன்மின்.

கு-ரை: 'பேசின், கெடுவீர்' என்பது குறிப்பெச்சம். இதுவும், அவன் தன்மை வரையறுக்கப்படாதென்றதேயாம். தட்டு - தடை. ஒட்டு - சார்பு. அடுக்குக்கள், வலியுறுத்தற் பொருள். ''தடுமாற்றத்தை, கோறலை'' என்ற இரண்டனுருபுகளை ''தட்டேனும்'' என்பதற்கு முன்னர் வைத்து உரைக்க. ''தொண்டர் காள்'' என்பவற்றையும் அடுக்காக்கி அதனை விரைவுப் பொருட்டென்க.

4. பொ-ரை : அடியவர்களே, நரிகள், இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க, ஓரிகள் கூக்குரலிட, செறிந்த இருட்காலத்தில், நெருப்பு எரிகின்ற இடத்தில், பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில், சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை, விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின்!

கு-ரை: ''எரிதலை'' என்றதில், தலை, இடம். அன்றி, 'நெருப்பு எரிவதுபோலும் தலையை உடைய பேய்கள்' என்று உரைத்தலுமாம். 'நரிதலை கௌவ என்பது முதலாக இவ்வாறு எடுத்துச் சொல்லி இகழன்மின்' என்றவாறு. இவையே அவனது உண்மைநிலையன்று என்றபடி.