468. | வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி | | விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர் | | பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப் | | பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் | | சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந் | | திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே | | காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங் | | கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே. | | 2 |
தாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், அத்தகையதான சந்தனமும் நீர், தவிராது அளித்தருளல் வேண்டும். கு-ரை: இடையில் வருவித்துரைத்தன, இசையெச்சங்கள், "பத்து" என்பது, மிகுதியுணர்தற்குக் கூறுவதொரு வழக்கு, "பாவையரை", உருபு மயக்கம், பொய்யாவன, பொருளில்லனவும், கவர்படு பொருளுடையனவுமாய சொற்கள், கரவுடையார் போல நடித்தலைக் கரவுடைமையாக அருளினார் என்க. "கடல்", ஆகுபெயர். 'நாகப் பட்டினம்' என்பது, "நாகை" எனவும் 'காயாரோகணம்' என்பது 'காரோணம்' எனவும் மருவின, காயாரோகணம், கோயிலின்பெயர்; இப்பெயர்க் காரணத்தை ஆறாந் திருமுறைக் குறிப்பிற் காண்க. 2. பொ-ரை: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், என்னை, கைப்புடைய வேம்பினையும், தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து, நான், இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க, நீர் என்முன் நில்லாது, திருத்துருத்தியில் புகுந்து, அங்கே இருந்துவிட்டீர்; இப்பொழுது உம்மைக் கண்டேன்; நீர் பாம்பும், விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விடநினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ! ஒட்டேன்; ஏனெனில், உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன்; நீர்ச்சேம்பும், செங்கழுநீரும், குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந்திருக்கும் தீவண்ணராகிய நீர், இப்பொழுது எனக்கு 'காம்பு' என்றும் 'நேத்திரம்' என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும். கு-ரை: 'வேம்பினோடு தீங்கரும்பு விரவித் தீற்றி' என்றது "விரகின்மையின் வித்தட் டுண்டனை" (புறம் - 227) என்றாற்போல, அன்னதொரு செயலைக் குறித்து நின்றது. பொருளைத் தொகாது
|