பக்கம் எண் :

808
 
469.

பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்

பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்

பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்

பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்

வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்

வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்

காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

3



வெளிப்படக் கூறினும், அதன் செயலைத் தொகுத்து, அதற்கு ஒத்ததொரு செயல் கூறலின், இதனையும் ஒட்டணியின்பாற் படுத்துக்கொள்க. "தீங்கரும்பு" என்ற அடையான், அதன் மறுதலையடை பெறப்பட்டது, வேம்பு உலகின்பமும், கரும்பு திருவருள் இன்பமும் என்க. இவ்வாறன்றி வேம்பு துன்பமும், கரும்பு இன்பமும் என இரண்டையும் உலகியலாக உரைத்தல், சுவாமிகள்பால் ஏற்புடைத்தாகாமை யறிக, 'இவற்றுள் ஒன்றே ஊட்டினீராயின், உம்பால் இவற்றை வேண்டுவேனல்லேன்; இரண்டையும் விரவி ஊட்டுதலின், வேண்டுவேனாயனேன்' என்றபடி. "தீற்றி" என்னும் எச்சம், "இருந்தீர்" என்பதனோடு முடிந்தது, "தீர்த்தீர்" என்பது பாடமாகாமை, சிவஞானமா பாடியத்தாலும் உணர்க. 'துருத்தி' என்பது 'ஆற்றிடைக்குறை' என்னும் நயம் தோற்றுவித்தது. 'காம்பு, நேத்திரம்' என்பன பட்டாடையின் வகைகள் என்பதறியாதார், தம் மனஞ்சென்றவாறே உரைப்ப.

3. பொ-ரை: விரிந்த சடையின்மேல் பாம்பையும், சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே, காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய, கடற்கரைக் கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி, விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி, இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர்; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழியாது, வீண் சொற்களைப் பேசி, பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின், மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ? சொல்லீர்.

கு-ரை: 'பாம்பையும், மதியையும் பகை தீர்த்து இயைய