பக்கம் எண் :

812
 
473.

தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்

தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து

தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்

திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்

நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த

நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

7

474.

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்

வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு

ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர்

அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்


7. பொ-ரை: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நல்லாடையை உடுத்த அகன்ற அல்குலையும், தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில், நீர் சொல்ல வந்தவன் போல, ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முன்னர் ஒறுத்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர்; அதுவன்றி, வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு, மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர்; அதுபோல, இன்று எனக்கு அருளல்வேண்டும்.

கு-ரை: சொற்பாடாய் - சொல்லுள் அகப்பட்டது போல. இராவணன் கயிலையை எடுத்ததனால் இறைவி நடுக்கங் கொண்டு ஊடல் தீர்ந்து இறைவனைத் தழுவிக் கொண்டாளாதலின், இராவணன் செய்தது இறைவன் சொல்ல, அச்சொற்படி செய்தது போன்றதாயிற்று. நித்தல் காசருளிச் செய்தமையை, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் புராணங்களிற் காண்க. திவ்யம், 'திப்பியம்' எனத் திரிந்தது.

8. பொ-ரை: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, யான் உமக்கு வழிவழியாக அடியேன்; அதுவன்றி, நீர் வலிந்து, என்னை, 'வாழ்விப்பேன்' என்று சொல்லி அடிமை கொண்டீர்; மிக்க செல்வம் உடையீர்; வறுமை