| தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந் | | தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன் | | காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங் | | கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | | 8 |
475. | மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி | | மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன் | | எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான் | | எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர் | | திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில் | | திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் | | கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா | | கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.9 | | 9 |
யுடையீரும் அல்லீர்;ஆயினும், மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீர்; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில், எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும்; அதனோடு ஏறிப் போவதற்கு, காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும்; இவைகளை அளியாதொழியின், உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது, உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன். கு-ரை: திருக்கூட்டங் கூடும் தேவாசிரிய மண்டபத்தை உடைய சிவராசதானியாதலின், "திருவாரூரிலே புகப்பெய்த அருநிதியம்" என்று அருளினார். அருநிதியம் - தொகுத்தற்கரிய தொகையான நிதியம், 'முக்கூற்றில் ஒரு கூறு என்றது என்னை யெனின், அஃது என் மனத்தெழுந்த கருத்து' என்பார். "தோற்ற மிகும்" என்றார், இனி. 'இறைவனுக்கு ஒரு கூறு, இறைவிக்கு ஒரு கூறு, அடியவர்க்கு ஒரு கூறு' என்று கூறிட்டு, அடியவர் கூற்றை அடியார் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதாக அருளினார் என்றலுமாம். 9. பொ-ரை: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, எம்பெருமானே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது. ஆதலின், நான் உம்மையுந் தெளிய மாட்டேன்; உம் தேவியாகிய மலையரையன் மகளையும், சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன்; அள
|