பக்கம் எண் :

814
 
476.

மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீர்

மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்

கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்

கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்

பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்

பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

10



வின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி, தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின், அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன்? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ? சொல்லியருளீர்; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துகொள்வேன்; பின்பு, 'இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன்' என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா.

கு-ரை: "உம்மதே" என்புழி, மகரவொற்று விரித்தல், இறைவரைத் தேறாமை, ஒன்றும் இல்லார்போல நடித்தல்பற்றியும் இறைவியைத் தேறாமை, அவர் செயலுக்கே அவள் துணையாய் இருத்தல் பற்றியுமாம். முருகனைத் தேறாமை, "சிறுவன்" என்றதனானே பெறப் பட்டது. 'எண்ணின்றி' என்பது 'எண்ணிலி' என நின்றது; 'எண்ணில' என்பதே பாடம் எனலும் ஒன்று.

10. பொ-ரை: மான் கன்று பொருந்திய கையை உடையவரே. தலைவரே, கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பெருமையோ மிக உடையீர்; 'மிக்க பொருட்குவையைத் தருவேன்' என்று சொல்லி, வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர்; ஆனால், இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி, திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர்; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால், நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ! படேன், இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும் மூன்று பொழுதிலும், கறியும், சோறும், அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும்.