பக்கம் எண் :

816
 

47. பொது

(ஊர்த் தொகை)

பதிக வரலாறு:

நம்பியாரூரர், திருவாரூரிலிருந்த நாள்களில் பல தலங்களையும் நினைந்து பாடியருளியதாதல் வேண்டும் இத் திருப்பதிகம்.

குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவர் எழுந்தருளியுள்ள பல தலங்களையும் நினைநது அருளிச் செய்தது. ஊர்த் தொகை - தலங்களது தொகுதியையுடைய பதிகம்.

பண்: பழம்பஞ்சுரம்

பதிக எண்: 47

திருச்சிற்றம்பலம்

478.

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே

கானப் பேரூராய்

கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே

கொழுநற் கொல்லேறே

பாட்டூர் பலரும் பரவப் படுவாய்

பனங்காட் டூரானே

மாட்டூ ரறவா மறவா துன்னைப்

பாடப் பணியாயே.

1



1. பொ-ரை: காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும், மலையும், தளிரும், கொல்லுந் தன்மையுடைய சிங்க ஏறும் போல்பவனே, பாட்டினை மிகவுணர்ந்தவர் பலராலும், அப்பாட்டுக்களால் பரவப்படுபவனே, எருதை ஊர்கின்ற அறமுதல்வனே, அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய்.

கு-ரை: காட்டூரூம், கொழுநலும் வைப்புத் தலங்கள், காட்டூரை, 'காட்டுப் பள்ளி' எனினுமாம். இதன்கண், 'கடம்பூர்' கானப்பேர், கோட்டூர், அழுந்தூர், பனங்காட்டூர்' என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன. "மாட்டு" என்றதில், டகர ஒற்று விரித்தல்; 'பாட்டூர், மாட்டூர்' என்பன, வைப்புத் தலத்தின் பெயர் என்பாரும் உளர். பனங்காட்டூர் - வன்பார்த்தான் பனங்காட்டூர். இஃதன்றி வேறாகக்கொண்டு, வைப்புத்தலம்