479. | கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் | | குழகா குற்றாலா | | மங்குற் றிரிவாய் வானோர் தலைவா | | வாய்மூர் மணவாளா | | சங்கக் குழையார் செவியா அழகா | | அவியா அனலேந்திக் | | கங்குற் புறங்காட் டாடீ அடியார் | | கவலை காளையாயே. | | 2 |
480. | நிறைக்காட் டானே நெஞ்சத் தானே | | நின்றி யூரானே | | மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் | | அனல்சேர் கையானே |
என்பர் அவர்.கானப்பேர் ஊர் - 'கானப்பேர்' என்னும் ஊர். அளவின்மைபற்றி, "கடல்" என்றும், அசைவின்மைபற்றி, 'மலை' என்றும், ஆண்மைபற்றி, 'கொல்லேறு' என்றும் அருளினார். இறைவரை, 'கடலே, மலையே' என்றற்றொடக்கத்தனவாகச் சொல்லி மகிழ்கின்றவர். அவைகளைச் செய்யுட்கேற்ப வைத்து அருளிச் செய்தார் என்க. 2. பொ-ரை: கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத்தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, மூப்படையாதவனே, வானத்தில் திரிபவனே, தேவர்க்குத் தலைவனே, மணவாளக்கோலம் உடையவனே, சங்கக்குழை பொருந்திய காதினையுடையவனே, அழகனே, எஞ்ஞான்றும் அவியாது எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக்கொண்டு, இரவில், புறங்காட்டில் ஆடுகின்றவனே, உன் அடியாரது மனக் கவலையைப் போக்கியருளாய். கு-ரை: குரக்குத்தளி, வைப்புத்தலம், இதன்கண் 'குற்றாலம், வாய்மூர்' என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன. அடியவர் பலர்க்கு விண்ணில் தோன்றிக் காட்சியளித்தலின், 'மங்குல் திரிவாய்' என்று அருளிச்செய்தார். 3. பொ-ரை: நின்றியூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, நெறிபிறழாமையையுடைய, சான்றானவனே, அடியவர்கள் நெஞ்சத்தில் இருப்பவனே, அவர்கட்குச் சிறிதும் துன்பத்தைக் காட்டாதவனே, நீர் பொருந்திய சடையை யுடையவனே, நெருப்புப் பொருந்திய கையை
|