| |  | மறைக்காட் டானேதிருமாந் துறையாய் |  |  | மாகோ ணத்தானே |  |  | இறைக்காட் டானே எங்கட் குன்னை |  |  | எம்மான் தம்மானே. |  |  | 3 | 
 | 481. | ஆரூர் அத்தா ஐயாற் றமுதே |  |  | அளப்பூர் அம்மானே |  |  | காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் |  |  | கருகா வூரானே |  |  | பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் |  |  | பிறவா நெறியானே |  |  | பாரூர் பலரும் பரவப் படுவாய் |  |  | பாசூர் அம்மானே. |  |  | 4 | 
 
 
 யுடையவனே, எம்தந்தைக்குத் தந்தையே, நீ எங்கட்டு உன்னைச் சிறிதும் புலப்படுத்தாதவனோ? கு-ரை: 'அல்லை யாதலின், புலப்படுத்தருளுக' என்பது எதிர்மறை எச்சமாய் வந்தியையும், இதனுள், 'நின்றியூர்' மறைக்காடு மாந்துறை, மாகோணம்' என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன. மாகோணம் - கோணமாமலை (திரிகோணமலை). 'நிறைக்காட்டான்' என்றதில் காட்டு - சான்று. இறைவனே எல்லாப் பொருட்கும் சான்றாதல் அறிக. 'மிறைக்காட்டான், இறைக்காட்டான்' என்பவற்றில் ககரவொற்று விரித்தல், 'இறைக்காட்டாயே' எனப் பாடம் ஓதுவாரும்' உளர். 4. பொ-ரை: ஆரூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, அமுதம் போல்பவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன். கு-ரை: 'ஆதலின், உன்னையே பரவுவேன்' என்பது குறிப்பெச்சம். இதனுள், அளப்பூரும், பேரூரும் வைப்புத் தலங்கள். 'பாரூர்' என்பதும், வைப்புத்தலத்தின் பெயர் என்பார் உளர். இதனுள், 'ஆரூர், கருகாவூர், பட்டீச்சுரம், பாசூர்' என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன. பிறவாத நெறி, வீடுபெறும்வழி; பிறப்பில்லாதவன் சிவபெரு  |