பக்கம் எண் :

819
 
482.

மருகல் லுறைவாய் மாகா ளத்தாய்

மதியஞ் சடையானே

அருகற் பிணிநின் னடியார் மேல

அகல அருளாயே

கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே

கானூர்க் கட்டியே

பருகப் பணியாய் அடியார்க் குன்னைப்

பவளப் படியானே.

5

483.

தாங்கூர் பிணிநின் னடியார் மேல

அகல அருளாயே

வேங்கூர் உறைவாய் விளமர் நகராய்

விடையார் கொடியானே



மானே ஆதலின், அவனே அதனை அடையும் வழியைத் தருதற்குரியவனாதலறிக. காரூர் பொழில்கள் புடைசூழ் புறவின் - மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் பக்கங்களிற் சூழ்ந்துள்ள முல்லை நிலத்தையுடைய.

5. பொ-ரை: மருகல் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே. சந்திரனைச் சடையில் அணிந்தவனே, கருகிய கண்டத்தை யுடையவனே, கரும்புபோல்பவனே, கட்டிபோல்பவனே, பவளம் போலும் வடிவத்தையுடையவனே, உன் அடியார்மேல் வருகின்ற, மெலிதற் காரணமான நோய்கள் விலகிச் செல்லவும், உன்னை அடைந்து இன்புறவும் அவர்கட்கு அருள் செய்யாய்.

கு-ரை: மாகாளம், வைப்புத்தலம், அம்பர் மாகாளம், இரும்பை மாகாளம் எனினுமாம். இதனுள், 'மருகல், வெண்ணி, கானூர் என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன. "குரல்" என்றது மிடற்றை. 'கருகற் குரல்' என்பது, வைப்புத் தலத்தின் பெயர் என்பாரும் உளர். தம்பொருட்டு வேண்டுவார், அதனோடு ஒழியாது அனைவர்க்குமாக வேண்டினார் என்க.

6. பொ-ரை:வேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, இடபம் பொருந்திய கொடியையுடையவனே, நம்பனே, பக்கங்களில் உள்ள ஊர்களிற் சென்று பிச்சை தேடுகின்ற வேறுபட்ட தன்மையனே, மேலானவனே, உன் அடியார்மேல் உள்ள பொறுத்தற்