| நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் | | நல்லூர் நம்பானே | | பாங்கூர் பலிதேர் பரனே பரமா | | பழனப் பதியானே. | | 6 |
484. | தேனைக் காவல் கொண்டு விண்ட | | கொன்றைச் செழுந்தாராய் | | வானைக் காவல் கொண்டு நின்றார் | | அறியா நெறியானே | | ஆனைக் காவில் அரனே பரனே | | அண்ணா மலையானே | | ஊனைக் காவல் கைவிட் டுன்னை | | உகப்பார் உணர்வாரே. | | 7 |
கரிய நோய்கள் விலகிச் செல்ல அருள்புரியாய். கு-ரை: வேங்கூர், நாங்கூர், தேங்கூர் இவை வைப்புத்தலம். "தேங்கூர்" என்றதனை, 'தெங்கூர்' என்பது முதல் நீண்டதாக உரைத்தலுமாம். இதனுள், 'விளமர், நல்லூர், பழனம்' என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன. "தாங்கு ஊர்" என்றது, 'பொறுத்தல் மிக்க' எனப் பொருள் தருதலின், அதற்கு இவ்வாறுரைக்கப் பட்டது. 7. பொ-ரை: 'ஆனைக்கா, அண்ணாமலை' என்னும் தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே, வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே, அழித்தல் தொழிலை உடையவனே, மேலானவனே, உடலோம்புதலை விட்டு, உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே, உன்னை உணர்வார்கள். கு-ரை: 'பிறர் உணரமாட்டார்' என்பது பிரிநிலை எச்சமாய் வந்தியையும்; 'உகப்பாரே' என்னும் பிரிநிலை ஏகாரம் விரிக்க.
|