485. | துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் | | சொல்லாய் கல்லாலா | | பலவாய்க் காற்றானாய் | | திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை | | இடங்கொள் கயிலாயா | | அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் | | அகல அருளாயே. | | 8 |
486. | புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் | | போதா மூதூரா | | பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற | | புரிபுன் சடையானே |
இதனுள், 'ஆனைக்கா, அண்ணாமலை' என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன. 8. பொ-ரை: துருத்தி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, ஒளிவடிவானவனே, சொல்லின்கண் உள்ளவனே, கல்லால மர நிழலில் இருப்பவனே, வெயிலாகியும், காற்றாகியும், மற்றும் பலவாகியும் நிற்பவனே, என் மனத்தை மேன்மேல் திருந்தச்செய்து, அதனை இடமாகக் கொண்டவனே, உன்னை அன்புசெய்து அடைந்தவர்களது வினைகள் நீங்க அவர்கட்கு அருள்செய்யாய். கு-ரை: இதனுள், 'துருத்தி, நெய்த்தானம், பருதி நியமம், கயிலாயம்' என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன, 'பருதிநியமம்' என்பது, எதுகைநோக்கி, விரித்தலாயிற்று. அடுக்கு, இடைவிடாமை பற்றி வந்தது. "அருத்தித்து" என்றது, 'அருத்தி' என்னும் பெயரடியாகப் பிறந்த செய்தெனெச்சம். 9. பொ-ரை: புலியூர்ச் சிற்றம்பலம் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, ஞான வடிவினனே பழமையான சிவலோகத்தை உடையவனே, பொலிவு பொருந்திய மூன்று ஊர்கள் எரிந்தொழியுமாறு அழித்த, புரித்த, புல்லிய சடையையுடையவனே, வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனது பெரிய இருபது கைகளையும் நெரித்த, பிறையைச் சூடினவனே, உன்னைக் கண்ணாற்
|