பக்கம் எண் :

822
 
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்

கடர்த்த மதிசூடீ

கலிசேர் புறவிற் கடவூ ராளீ

காண அருளாயே.

9

487.கைம்மா உரிவை அம்மான் காக்கும்

பலவூர் கருத்துன்னி

மைம்மாந் தடங்கண் மதுர மன்ன/B>

மொழியாள் மடச்சிங்கடி

தம்மான் ஊரன் சடையன் சிறுவன்

அடியன் தமிழ்மாலை

செம்மாந் திருந்து திருவாய் திறப்பார்

சிவலோ கத்தாரே.

10

திருச்சிற்றம்பலம்


காண அருளாய்.

கு-ரை: இதனுள், 'புலியூர், புகலூர், கடவூர்' என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன. புலியூர் - பெரும்பற்றப்புலியூர்; தில்லை. "சிற்றம்பலம்" அங்குக் கூத்தப்பெருமான் உள்ள இடம். கலிசேர் புறவின் - எழுச்சியையுடைய முல்லை நிலத்தையுடைய. மூதூர் வைப்புத்தலத்தின் பெயர் என்பாரும் உளர்.

10. பொ-ரை: மை தீட்டிய, மாவடுப்போலும் பெரிய கண்களையும், இனிமை நிலைபெற்ற அழகிய சொல்லையும், இளமையையும் உடையவளாகிய சிங்கடிக்குத் தந்தையும், சடையனாருக்கு மகனும், யானைத் தோலையுடைய பெருமானுக்கு அடியனும் ஆகிய நம்பியாரூரனது இத்தமிழ்மாலையை, அப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற பல தலங்களையும் நினைந்து கவலையற்றிருந்து, சிறந்த வாயாற் பாடுவோர், சிவலோகத் திருப்பவரேயாவர்.

கு-ரை: 'மதுரம் மன்னு அம்மொழியாள்' எனப் பிரிக்க. இனி, 'மதுரம்' என்றது ஆகுபெயராய்த் தேனைக் குறித்தது எனக் கொண்டு, 'தேன்போலும் மொழி' என்றலுமாம். இறைவனைப் பாடுதலின், வாய் திருவுடையதாயிற்று.