பக்கம் எண் :

823
 

48. திருப்பாண்டிக்கொடுமுடி

(நமச்சிவாயத் திருப்பதிகம்)

பதிக வரலாறு:

சுந்தரர், திருஈங்கோய்மலை முதலாகப் பல தலங்களைத் தொழுது. கொங்குநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்து, கோயில்முன் குறுகி, வணங்கி, 'இங்கிவர் தம்மை மறக்கவொண்ணாது' என்று உள்ளத்தில் எழுந்த குறிப்பினால் திருவைந்தெழுத்தை அமைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். ஒவ்வொருபாடலின் இறுதியிலும் "சொல்லுநா நமச்சிவாயவே" என்று அருளியிருப்பதால், இதற்கு, 'நமச்சிவாயத் திருப்பதிகம்' என்ற பெயர் வழங்கப்படுகிறது. (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 87)

குறிப்பு: இத்திருப்பதிகம், கொடுமுடிக் கோயிலில் உள்ள பெருமானது அழகிய திருமேனியைக் கண்டு வணங்கியபொழுது எழுந்த பேரன்பால், 'இவரை, யான்மறவேன்' என்னும்கருத்தால் அருளிச் செய்தது. இதன்கண் திருவைந்தெழுத்தை எடுத்தோதியருளினமையின், இது, 'நமச்சிவாயத் திருப்பதிகம்' என்னுந் திருப்பெயரைப் பெற்றது.

பண்: பழம்பஞ்சுரம்

பதிக எண்: 48

திருச்சிற்றம்பலம்

488.மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்

பாத மேமனம் பாவித்தேன்

பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற

வாத தன்மைவந் தெய்தினேன்

கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்

சொல்லும்நா நமச்சி வாயவே.

1



1. பொ-ரை: கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நல்ல தவவடிவினனே, எனக்கு வேறு்