பக்கம் எண் :

824
 
489.இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்

திட்ட நாள்மறந் திட்டநாள்

கெட்ட நாள்இவை என்ற லாற்கரு

தேன்கி ளர்புனற் காவிரி

வட்ட வாசிகை கொண்ட டிதொழு

தேத்து பாண்டிக் கொடுமுடி

நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்

சொல்லும்நா நமச்சி வாயவே.

2



துணையில்லையாகும்படி, உனது திருவடியையே துணையாக மனத்திலதுணியப்பெற்றேன்; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே, நான் மனிதனாய்ப் பிறந்தவனாயினேன்; அதுவன்றி, இனியொரு பிறப்பிற் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன்; இனி உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.

கு-ரை: 'அங்ஙனஞ் சொல்லுமாறு பயில்வேன்' என்றவாறு 'இல்யைாக' என்பது, 'இன்றி' எனத் திரிந்தது. 'பெற்றலும்' என்றதில் றகர ஒற்று, விரித்தல். 'பெறலும்' எனப் பின்னர் வருகின்றமையின், "பாவித்தேன்" என்றதற்கு, 'பாவிக்கப்பெற்றேன்' என்பது பொருளாயிற்று. 'கறையூர்' என்பது தலத்தின் பெயர்; பாண்டிக் கொடிமுடி' என்பது கோயிலின் பெயர்; 'கறையூர்' என்பதனையும் வைப்புத்தலம் என்றார் உளர்; இவ்வாறே பலவற்றையும் கூறுதல் அவர்க்கு இயல்பென்க. 'நமச்சிவாய' என்னும் சொல், தன்னையே உணர்த்தி நின்றது.

2. பொ-ரை: மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாறு, வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற. 'திருப்பாண்டிக் கொடுமுடி, என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, தோழமை கொண்டவனே, உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான், உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் 'இவன் நிலையில்லாத மனத்தையுடையவன்' என்று இகழப்பட்ட நாள்களும், அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை, அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன்; ஆதலின், நான் உன்னை மறக்கினும், என்நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.