490. | ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் | | போகும் நாள்உயர் பாடைமேல் | | காவு நாள்இவை என்ற லாற்கரு | | தேன்கி ளர்புனற் காவிரிப் | | பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் | | சோதி பாண்டிக் கொடுமுடி | | நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் | | சொல்லும்நா நமச்சி வாயவே. | | 3 |
491. | எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை | | தம்பி ரான்என்பொன் மாமணி | | கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி | | காவி ரியதன் வாய்க்கரை |
கு-ரை: 'இட்டனுன்னடி' என்பது, 'நுன்னடி' என்றும் 'உன்னடி' என்றும் பிரித்தற்கு ஏற்புடையதாதல் அறிக. 'இட்டனும்மடி' என்பது பாடம் அன்று. காவிரி நதி, பல பூக்களையும், மணிகளையும் கரையில் நிரைபடக்கொணர்ந்து ஒதுக்குதலை, வாசிகை கொண்டு வந்து வழிபடுதலாக அருளினார்; இது, தற்குறிப்பேற்றம் 3. பொ-ரை: மேலான ஒளியாய் உள்ளவனே, மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாற்றினது பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற, 'திருப் பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நா வன்மை யுடையவனே, அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை, என் உணர்வு அழிந்த நாள்களும், உயிர்போன நாள்களும், உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி, வேறு நல்ல நாளாகக் கருதமட்டேன; ஆதலின், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும். கு-ரை: தாம் வாழும் நாளளவும் உள்ள நிகழ்ச்சிபற்றிக் கூறுகின்றாராகலின், செய்யுமென்னும் வாய்பாட்டாற் கூறினார். "புனல்" இரண்டனுள். பின்னது, 'வெள்ளம்' என்னும் பொருளில் வந்தது. மறைகளையும், மறைகளின் பொருளையும் சொல்பவனாதல் பற்றி, இறைவனை, நாவலன் என்று அருளினார். 4. பொ-ரை: எல்லையில்லாத புகழையுடைய எம்பெருமானே, எந் தந்தைக்கும் தலைவனே, என் பொன்போல்பவனே, என் மணி
|