பக்கம் எண் :

826
 
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடி

வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்

சொல்லும்நா நமச்சி வாயவே.

4

492.அஞ்சி னார்க்கர ணாதி என்றடி

யேனும் நான்மிக அஞ்சினேன்

அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்

நல்கி னாய்க்கழி கின்றதென்

பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்

தாடு பாண்டிக் கொடுமுடி

நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்

சொல்லும்நா நமச்சி வாயவே.

5



போல்பவனே,மணிகளைத் தள்ளிவந்து, எவ்விடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண். நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற, புகழையுடைய கறையூரில் உள்ள, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எல்லாம் வல்லவனே, உன்னை நான் மறந்தாலும் என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை இடையறாது சொல்லும்.

கு-ரை: "என்" என்றதனை, "மணி" என்றதற்குங் கூட்டுக. 'கரைவாய்' என மாற்றி யுரைக்க.

5. பொ-ரை: ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளையுடைய பாவைபோலும் மகளிர் காவிரித்துறைக்கண் மூழ்கி விளையாடுகின்ற, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனே, நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து, அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன்; அதனையறிந்து நீ அவ்வண்ணமே 'அஞ்சேல்' என்று சொல்லி அணைத்து, அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய்; அதனால் உனக்குக் கெடுகின்றது ஒன்றின்மையைக் கண்டேன்; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான்