494. | விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் | | தேன்வி னைகளும் விண்டன | | நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற | | நின்ற காவிரிக்கோட்டிடைக் | | குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் | | தாடுபாண்டிக் கொடுமுடி | | விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ் | | சொல்லும்நா நமச்சி வாயவே. | | 7 |
495. | செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் | | தீயெ ழச்சிலை கோலினாய் | | வம்பு லாங்குழ லாளைப் பாக | | மமர்ந்து காவிரிக் கோட்டிடைக் | | கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் | | ஆடு பாண்டிக் கொடுமுடி | | நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ் | | சொல்லும்நா நமச்சி வாயவே. | | 8 |
7. பொ-ரை: தென்னங் குரும்பைபோலும், மெல்லிய கொங்கைகளையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது, வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, விரும்பப்படுபவனே, அடியேன், உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன்; அதனால், நீங்குதற்கரிய வினைகளும் நீங்கின; இனி, உன்னைநான் மறந்தாலும், என்நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும். கு-ரை: 'வினைகளும்' என்னும் உம்மை இழிவு சிறப்பு. 'வினைகளும் விண்டனன்' என்றும் பாடம் ஓதுவர். 'நம்பன்' என்பதனை, "விரும்பன்" என்று அருளினார். 8. பொ-ரை: செம்பொன்போலும் சடையையுடையவனே, திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து, காவிரி
|