பக்கம் எண் :

829
 
496.சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை

தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று

பேரெ ணாயிர கோடி தேவர்

பிதற்றி நின்று பிரிகிலார்

நார ணண்பிர மன்தொ ழுங்கறை

யூரிற் பாண்டிக் கொடுமுடிக்

கார ணாஉனை நான்ம றக்கினுஞ்

சொல்லும்நா நமச்சி வாயவே.

9



யாற்றினது கரையின்கண் உள்ள, சோலைகளில், கிளைகளின்மேற் குயில்கள் கூவ, சிறந்த மயில்கள் ஆடுகின்ற, 'திருப்பாண்டிக்கொடு முடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.

கு-ரை: "அமர்ந்து" என்றது, அதன் காரியந் தோற்றி நின்றது. நம்பன் - விரும்பத் தக்கவன்.

9. பொ-ரை: திருமாலும், பிரமனும் வணங்குகின்ற, கறையூரில் உள்ள, 'திருப்பாண்டிக்கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வனே, அளவற்ற தேவர்; 'எமக்குப் புகலிடமானவன்; எம்தந்தை; எம்தலைவன்; எம் தந்தைக்கும் தலைவன்; எங்கள் பொன்; எங்கள் மணி' என்று சொல்லி, உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று, உன்னைப் பிரியமாட்டார்; இன்ன பெரியோனாகிய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.

கு-ரை: சாரணன் - 'அடைக்கலம்' எனப் பொருள் தரும் 'சரண்' என்பதனடியாக வந்த தத்திதப் பெயர். 'என் பொன்' என்பது பாடம் அன்று. "எண்ணாயிரகோடி" என்றது, அளவின்மை குறித்தவாறு.

காரணண் - எல்லாக் காரியங்கட்கும் முன்னிற்பவன்; முதல்வன். இத்திருப்பாடலின் முதலடி ஒருசீர் மிகுந்து வந்தது அடி மயக்கம்.