497. | கோணி யபிறை சூடி யைக்கறை | | யூரிற் பாண்டிக் கொடுமுடி | | பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் | | பித்த னைப்பிறப் பில்லியைப் | | பாணு லாவரி வண்ட றைகொன்றைத் | | தார னைப்படப் பாம்பரை | | நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை | | சொல்லு வார்க்கில்லை துன்பமே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: வளைந்த பிறையைச் சூடினவனும், தலைக் கோலம் உடையவனும், பேரருள் உடையவனும், பிறப்பில்லாதவனும், இசையோடு உலாவுகின்ற வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றைப் பூமாலையை அணிந்தவனும்' படத்தையுடைய பாம்பாகிய அரைநாணை உடையவனும் ஆகிய கறையூரில் உள்ள 'திருப்பாண்டிக்கொடுமுடி' என்னும் கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுவார்க்குத் துன்பம் இல்லையாம். கு-ரை: இறுதிக்கண் நிற்றற்பாலதாய, "கறையூரிற் பாண்டிக் கொடுமுடி பேணிய பெருமானை" என்றது, செய்யுள் நோக்கி, இடைநின்றது. 'பண்' என்பது நீண்டது; இதன்பின், ஓடுவுருபு விரிக்க. ஏயர்கோன் கலிக்காமர் புராணம் | | அண்ணலா ரடிகள் மறக்கினும் நாம | அஞ்செழுத் தறியஎப் பொழுதும் | எண்ணிய நாவே இன்சுவை பெருக | இடையறா தியம்புமென் றிதனைத் | திண்ணிய உணர்விற் கொள்பவர் மற்றுப் | பற்றிலேன் எனச் செழுந் தமிழால் | நண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார் | நமச்சிவா யத்திருப் பதிகம் | - தி. 12 சேக்கிழார் |
|